Sunday, January 30, 2011

தல பொங்கல்!

இவ்வாண்டு பொங்கல் எனக்கு 'தலை பொங்கல்'.   ஆம்! எனக்கு திருமணமானபின் வரும் முதல் பொங்கல். பொங்கலுக்கு முதல்நாள் கடைகளுக்கு சென்று அடுப்புகட்டி, பணஓலை மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்களை திருநெல்வேலியில் இருந்து வாங்கி வந்தோம். அனைத்தையும் வாங்கி வீட்டுக்கு வரும்போது மணி இரவு பத்துக்கு மேல் ஆகிவிட்டது.

அதற்கு பிறகு நான், என் அம்மா, மற்றும் என் மனைவி மூவரும் சேர்ந்து வீட்டு வாசலில் கோலம் போட்டு, அடுப்புகட்டிகளுக்கு வண்ணம் பூசி, வீட்டு முற்றத்தில் மணல் பரப்பி, கரும்பு மஞ்சள் சேர்த்து வாசலில் தோரணம் கட்டி முடித்தோம். நாள் முழுவதும் அலைந்துவிட்டு, களைப்போடு செய்தாலும் மனதிற்க்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.




பொங்கல் அன்று அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து குளித்து அனைவரும் பொங்கல் விட வீட்டு வாசலுக்கு வந்தோம். அம்மா, அப்பா, தம்பி, நான் மற்றும் என் மனைவி என ஐவரும் சந்தோசமாக அடுப்பை பற்றவைத்தோம். பொங்கல் சிறப்பாக பொங்கியது கிழக்கு நோக்க. பொங்கலை கடவுளுக்கு படைத்தது வழிபட்டோம்.



என் மைத்துனர்கள் (என் மனைவியின் சகோதரர்கள்) கழுகுமலையில் பொங்கல் கொண்டாடிவிட்டு இங்கு (வள்ளியூர்) வந்திருந்தார்கள். அவர்களோடு சென்று நாங்கள் அன்று மலை காட்சி சிறுத்தை திரைப்படத்துக்கு சென்றோம். இப்படி தலை பொங்கல் சிறப்பாக முடிந்தது.


No comments:

Post a Comment