Sunday, January 02, 2011

2011 ஆம் ஆண்டின் முதல் நாள்

ஆங்கில புத்தாண்டை இம்முறை நாங்கள் வரவேற்றது மன்மதன் அம்போடு. ஆம்! காலை எழுந்து சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு நாங்கள் மன்மதன் அம்பு பார்ப்பதற்கு கிளம்பியபோது நேரம் காலை 10:30 மணி.

சத்யம் திரையரங்கில் காலை 11:15 மணி காட்சி. சோள்ளிங்கநல்லூரிலிருந்து சத்யம் திரையரங்கிற்கு செல்ல வேண்டும். படத்திற்கு தாமதமாகத்தான் சொல்வோம் என்று எண்ணி காரை கிளப்பினேன். ஆனால் ஆச்சர்யம்! சாலையில் வாகன நெரிசல் அதிகம் இல்லாததால் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே சத்யம் சென்றடைந்தோம்.

முதல் பாதி நன்றாகவே இருந்தது. இடைவேளை வரை நேரம் போனதே தெரியவில்லை என்று சொல்லலாம். முதல் பாதியில் நான் ரசித்த சில வசனங்களை இங்கே சொல்லியாக வேண்டும். மாதவன் த்ரிஷாவிடம் "நான் இந்த உலகத்தையே உன் காலடியில் வைப்பேன்" என்று சொல்ல. அதற்கு த்ரிஷாவோ "யாரும் யாரோடைய காலிலையும் உலகத்தை வைக்க வேண்டாம். அது அங்கதான் இருக்கு. பிச்சகாரனுக்கு கூட உலகம் காலுக்கு அடியில் தான் இருக்கிறது." என்று சொல்வார். மாதவன் கமலிடம் த்ரிஷாவை திமிர் பிடித்தவள் என்று சொல்ல. அதற்கு கமல் "நேர்மையா இருக்கிறவங்ககிட்ட திமிர் இருக்கத்தான் செய்யும். அது மட்டும் இல்லேன்னா அவங்கள ஏரி மேயஞ்சிட்டு போயிருவாங்க" என்று சொல்வார்.

த்ரிஷாவை உளவு பார்பதற்காக கமலை அனுப்பியிருப்பார் மாதவன் (காரணம், மாதவனும் த்ரிஷாவும் காதலர்கள். நிச்சயதார்த்தம் வரை சென்றிருக்கும் இவர்கள் காதல்). இதை தவிர கமலுக்கும் இவ்விருவர்க்கும் வேறு எந்த சம்பதமும் இருக்காது, இடைவேளைக்கு சற்று முன்னர் வரை.  அனால் கமலுடைய வாழ்க்கையில் இந்த காதலர்கள் (மாதவன், த்ரிஷா) அவர்கள் அறியாமலே வந்து போயிருப்பர் என்று நமக்கு உணர்த்தும் இடத்தில் இடைவேளை.

இடைவேளைக்கு பிறகுதான் படம் சுமார் ரகம் என்று சொல்லும் அளவுக்கு செல்கிறது. படம் பார்ப்பவர்களை சிரிக்க வைக்க நன்றாக முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் நகைச்சுவையை விட அவர்கள் அதற்கு செய்யும் முயற்சி தான் நமக்கு தெரிவதால் சிரிப்பு வரவில்லை பரிதாபம்தான் வருது. குறிப்பாக பின் பாதியில் கமல், சங்கீதா மற்றும் கூட்டாளிகள் செய்யும் சேஷ்டைகள் சகிக்கல.

மாதவனின் கதாபாத்திரத்தை போதைலையே எழுதிருப்பர் போல. அவ்வளவு குழப்பம். உதாரணமாக, படத்தில் மாதவன் த்ரிஷாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கல்யாணம் பண்ணாமல், கல்யாணம் ஆகி விவாகரத்து பெற்ற விவகாரமான சங்கீதாவோடு செல்வது போல் காட்டியிருக்கின்றனர். த்ரிஷா கமலோடு சென்றால்தான் மக்கள் சந்தோஷபடுவர்கள் என்று எண்ணியிருப்பர் போல. யார் சந்தோஷபட்டிருப்பார் என்று அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

ஒரு வழியாக படத்தை முடித்துவிட்டு மெரினா கடற்கரையில் சிறிது நேரம் போக்கிவிட்டு வீடு திரும்பினோம்.

No comments:

Post a Comment