Thursday, December 27, 2012

A tour on Nandi Hills from Bangalore


Last weekend by 22-Dec-2012, we went to Nandi Hills. We stayed for the day 22-Dec-2012 and returned back to Bangalore by 23-Dec-2012. We were of two families. We started from Bangalore, (Sony World Signal, Koramangala) around 11:30 Hrs IST. And we reached Nandi Hills by 14:00 Hrs IST.

From Koramangala Sony World Signal, we reached the Bangalore-Hyderabad NH7 road via the M.G.Road. We drove towards Hyderabad on NH7 and took a left turn from it to Nandi Hills. The left turn on NH7 is around 9.5 Kms from the toll-gate which is near to the Bangalore International Airport.

From that left turn, the Nandi Hills is around 22.5 Kms out of which around 9 Kms are hill travel. The hill road is good in condition. And there are total 10 Hair-pin bends on it. And the hair-pin bends start from the 5th Km of the hill travel. Also road in this stretch (from 5th Km to hill top) is very steep.

After 8 Kms of hill travel we reached the entrance to Nandi Hills top. And there we bought the entrance fee for Rs. 80 for our car. We travelled a Km to reach the Karnataka Hotels, Pine Top.

Karnataka Hotels, Pine Top at Nandi Hills

We stayed at Karnataka Hotels, Pine Top for the day 22-Dec-2012. We did the reservation through http://www.karnatakaholidays.net. During our check-in, we are asked to give our original proof of identity. We gave our PAN card which we got back only at the time of check-out.

The hotel has only three rooms. Each room has a double bed, two chairs with tea-table, and an attached bathroom. The rooms are pretty decent in space and cleanliness.


And in-front of the rooms there is a lawn which is exclusively for the people who rented out the rooms. It is not open to public.

The hotel is on the edge of the mountain. And hence we get a good view point from the room. The location of the hotel can be rated as the best.

It was around 14:30 Hrs, we had lunch at our room. And we spent some quality time in the park (which is in front of the rooms) enjoying the scenaries and taking photos. After that had a good sleep till 18:00 Hrs IST.

There was a temple near the Pine Top Hotel. And in front of the temple there is a very big open space and a view point. We spent time in the evening by walking on the open space and by getting the night view of the near-by towns from the view point.


By 19:30 Hrs IST, we ordered dinner to our room. The Pine Top Hotels winds-up its operation by 19:30 Hrs IST. So in it, getting dinner after that is not possible.

Had dinner, spent time in the park, enjoyed the night view of the near-by towns, played with children at hotel veranda, spent some time on chatting and at-last went to bed by 23:00 Hrs IST.

Early morning the next day (23-Dec-2012), we woke-up by the screams of people at view point waiting for the sunrise. Took my camera and came out of my room for some good shots on the sunrise.


Refreshed ourselves and came out of the hotel around 8:30 Hrs IST. We had breakfast at the small outlet of Hotel Pine Top.

Breakfast is not available inside the Hotel Pine Top. Breakfast is made available only at that small outlet which is little away from the Hotel. Masala Dosa, Plain Dosa, Bread Omelette and samosa are served there. There is also a small shop near to this outlet, which serves milk, tea, coffee and ice-creams.

Beware of monkeys there while taking eatables.

After breakfast, we went to the temple and tippu's drop. We spent more than 2 Hrs on these after which we checked-out the rooms by 11:30 Hrs IST.


We spent another one hour on some near-by parks and view points. By 12:30 Hrs IST, we started to Bangalore. We had our lunch at A2B in Bangalore and it was 15:30 Hrs when we reached Koramangala, Bangalore.

Distance metrics
The distance metrics mentioned below are based on my car's (Santro's) odometer.
  1. Sony world signal, Koramangala, Bangalore to Nandi Hills Top = 68 Kms
    1. Sony world signal, Koramangala, Bangalore to Toll-gate near Bangalore International Airport = 36 Kms
    2. Toll-gate near Bangalore International Airport to Nandi Hills Top = 32 Kms
      1. Toll-gate near Bangalore International Airport to the left deviation from NH7 = 9.5 Kms
      2. Left deviation from NH7 to Nandi Hills base = 13.5 Kms
      3. Nandi Hills base to Nandi Hills Top = 9 Kms

Tolls
  1. There is only on toll-gate near the Bangalore International airport. We paid Rs.20 for one way.
  2. There is an entrance fee for the Nandi Hills top. We paid Rs. 80 for our Santro.

Points to take care
  1. Right now the over-bridge work is going on the NH7 road till the Bangalore international airport. Hence there are more diversions.
  2. There are many speed-breakers on the road that starts from the left deviation from NH7 to Nandi Hills base. And most of these are not that visible. Hence extra care should be taken while driving.
  3. The hill road is around 9 Kms. And there are 10 hair-pin bends starting from the 5th Km. And the road is also very steeper in this stretch. 


Wednesday, October 10, 2012

Got back my lost mobile... :)

It was around 08:25 Hrs IST today, I received a call from my lost mobile (see my previous post on this). I was more than happy because it came at the time I lost hope in getting back the mobile.

The guy at the other end (who called me on my lost mobile) said he found the mobile at the place exactly where I lost my mobile.

I collected my mobile from him. I thanked him for being so kind on returning the mobile.

Tuesday, October 09, 2012

In bad times...


07-Oct-2012, Sunday: 
  1. On the way to Bangalore from my hometown Vallioor, my car wobbled due to some problem in the front left wheel side.
  2. Had a miraculous escape while checking the problem on the road-side. Still struggling to recover from the same.
  3. Halted at Dindigul to get the car fixed next day. It was raining heavily.

08-Oct-2012, Monday:
  1. Checked my car at Hyundai service center at Dindigul. Found that a crack was developed in front left wheel. Further driving would cause the tyre burst.
  2. Caught red-handed near Bangalore for over-speeding and paid a fine of Rs. 300.

09-Oct-2012, Tuesday:
  1. Lost my mobile that I had for Karnataka number.

Tuesday, September 11, 2012

"The day I stopped drinking milk" by Sudha Murthy


One afternoon, after lunch, happened to read a story from the daily newspaper "Times of India". The story titled "Bombay to Banglore" took from the book "The day I stopped drinking milk" by Sudha Murthy. Impressed by the story I wanted to read other life stories from Sudha Murthy.

Bought and read the book. The book is a collection of 23 life stories of Sudha Murthy. Below are the excerpts from the book that I would like to highlight.

  1. We can't choose the community or religion that we are born into - so we should never think that our community is our identity.
  2. Money comes with expectations and spoils the delicate equilibrium of social work.
  3. I realized then that only diseases and not honesty and integrity are passed down to the next generation through genes.
  4. Once a volunteer becomes a paid worker, there is always a chance of corruption making its way into the organization.
  5. When a person is dead, caste is never an issue. One's birth only decides how one's body should be disposed of.
  6. Normally, when people lend a helping hand, there is always an expectation of getting something in return. But if you are a true philanthropist, the expectation decreases over time. A sense of ownership becomes meaningless in the larger context of life. This selfless helpfulness brings true happiness to a person.
  7. There is a saying that when you get a gift, don't think of its price because it is the thought that is more important.
  8. If you want to know people, you should know the history of their land and where they come from. History also tells you about culture and culture is a big part of people's personalities.
  9. Sharing is an important quality that binds people and society itself survives on sharing.
  10. Don't judge a person by their looks or from rumors. Looks can be deceptive. It is not that all rich people are bad and neither is it true that all simple-looking people are innocent. Ignorance is different from innocence. Ignorance is a lack of knowledge but innocence is about trust and believing other people. A child is always innocent but we adults are ignorant and hardly innocent.
  11. Having good relationships, compassion and peace of mind is much more important than achievements, awards, degrees or money.
  12. Compassion cannot be taught, sold or brought. It is one of the characteristics that you have to develop from the beginning. Understand that life is a journey. In that short journey, if you can show compassion to others, show it now. 
  13. Tradition is different from ritual. A tradition passes down values to the next generation but a ritual or ceremony is what you do by practice and habit. We shouldn't break traditions but rituals can be changed depending upon the circumstances. Rituals are almost always formed based on geographical, economic and social conditions.
  14. Knowledge and the ability to work hard are the two qualities that are the stepping stones to success.
  15. It is very difficult to earn trust. It takes years to build and it can be destroyed in an instant by one bad deed. Trust requires an enormous amount of integrity and you have to prove every time that you are worthy of it.
  16. Every human being has an ego. But it is up to us to decide how much we have and how we exercise it.
  17. A fire cannot be extinguished with another fire. It is only water that can make a difference.
  18. People remeber the acievers in their own field or if they are close relatives or friends. The rest of the world reads your name in the newspapers and forget easily.
  19. Time is precious. If you don't do your work on time, it is as good as not doing it.
  20. Poverty does not mean just a lack of money but also a lack of confidence. Money can be earned in life but confidence is easy to lose and very hard to gain back.
  21. I learnt that there is a limitation to human power and achievements, and that even with money you cannot help everyone. You cannot substitute many things in life with money.
  22. Most people do not have  the same values when they get money. Money changes a person completely. Very few people can withstand the lure of money and they are difficult to find. I have learnt that wherever there is money, people like to take advantage of the situation and maximize their return.
  23. When a person passes away, what he may have collected materially over a period of time becomes irrelevant to the next generation.
  24. When a doctor makes a mistake, a person goes six feet below the ground. When a judge makes a mistake, a person is hung six feet above the ground. But when a teacher makes a mistake, the entire batch of students is destroyed.  


Sunday, September 09, 2012

மகாத்மா காந்தியின் சுய சரிதை - "சத்திய சோதனை" ஐந்தாம் பாகத்திலிருந்து

  1. எதிராளியின் கருத்து இன்னது என்பதை அறிந்து கொண்டு, சாத்தியமான வரையில் அவருடன் ஒத்துபோவது என்பதே சத்தியாக்கிரகி என்ற முறையில் என்னுடைய தருமமாகும்.

  2. 'நான்' என்ற அகந்தையைப் போக்கிக்கொண்டு விடுவதுதான், அடக்கம் என்பதற்குரிய உண்மையான பொருள். 'நான்' என்பது அற்றுப் போவதே மோட்சம். இது அதனளவில் ஓர்  ஒழுக்க முறையாக இருக்க முடியாதெனினும் இதை அடைவதற்கு மற்ற ஒழுக்க முறைகளை அனுசரிப்பது அவசியமாகும்.

  3. அடக்கமில்லாத சேவை, சுயநலமும் அகம்பாவமுமே அன்றி வேறல்ல.

  4. மக்களுக்குத் தன்னலமற்ற வகையில் எந்தத் துறையில் தொண்டு செய்தாலும், முடிவில் அது நாட்டிற்கு ராஜீய வகையில் உதவி செய்வதாகவே ஆகும்.

  5. கடவுளின் வழிகளை விவரிக்க மனிதனின் மொழிகள் தகுந்தவை அல்ல. அவர் வழிகள் விவரிக்க முடியாதவை, பகுத்தறிய முடியாதவை - இயலாதவை - என்ற உண்மையை நான் உணருகிறேன். ஆனால், அவற்றை விவரித்துக் கூறிவிட மனிதன் துணிவானாயின், அதற்கு அவனுடைய தெளிவில்லாத பேச்சைத் தவிர வேறு எந்தவித சாதனமுமே கிடையாது.

  6. நம் நாட்டில் வறுமையும் பட்டினியும் மக்களை வாட்டி வருகின்றன. இதனால், ஆண்டுதோறும் பிச்சைக்காரர்களின் தொகை பெருகிக் கொண்டே போகிறது. இவர்கள் வேறு கதியின்றி வயிற்றுச் சோற்றுக்காகப் போராடுவது, நேர்மை, சுயமரியாதை ஆகிய உணர்ச்சிகளே இல்லாதவர்களாக அவர்களை ஆக்கி விடுகிறது. நமது தருமப் பிரபுக்கள், அவர்களுக்கு வேலை கொடுப்பதற்கு வேண்டிய காரியங்களைச் செய்யாமல், வயிற்றுப் பாட்டுக்கு வேலை செய்தாக வேண்டும் என்று அவர்களை வற்புறுத்தாமல், அவர்களுக்குப் பிச்சை போடுகிறார்கள்.

  7. அதிகாரிகள், வரி செலுத்துவோர் கொடுக்கும் பணத்திலிருந்தே சம்பளம் பெறுவதால் அவர்கள் மக்களின் சேவர்களே அன்றி மக்களுக்கு எஜமானர்கள் அல்ல.

  8. பிறரிடம் மரியாதையாக நடப்பது என்பது சத்தியாக்கிரகத்தின் மிகக் கடுமையான பகுதி என்பதை அனுபவம் எனக்குப் போதித்திருக்கிறது. மரியாதையாக நடப்பது என்பதற்கு, அச்சமயத்திற்கு ஏற்பப் பழகி வைத்துக்கொள்ளும் நயமான வெளிப் பேச்சு என்பதல்ல, இங்கே பொருள். பெருந்தன்மை, மனப்பூர்வமாக ஏற்பட்டதாக இருப்பதோடு எதிரிக்கும் நல்லதைச் செய்யும் விருப்பமும் இருக்க வேண்டும்.

  9. மக்களின் கதி மோட்சம், அவர்களையும், துன்பங்களை அனுபவிப்பதற்கும் தியாகத்துக்கும் அவர்களுக்குள்ள தகுதியையும் பொறுத்தே இருக்கிறது.

  10. மத சம்பந்தமான விஷயங்களில் நம்பிக்கைகள் மாறுபடுகின்றன. அவரவரின் நம்பிக்கைதான் அவரவர்களுக்கு மேலானதாகும். மத சம்பந்தாமான விஷயங்களிலெல்லாம் எல்லோருக்கும் ஒரே விதமான நம்பிக்கை இருக்குமானால், உலகில் ஒரே ஒரு மதம் தான் இருக்கும்.

  11. எப்பொழுதுமே, நம்பிக்கை இல்லாததனாலும் பலவீனத்தினாலுமே சந்தேகம் உண்டாகிறது.

  12. பொதுஜனப் போக்கிலிருக்கும் வழக்கமான ஒரு தன்மையை நான் கவனித்து வந்திருக்கிறேன். ஆவேசம் தரும் வேலையென்றால்  பிரியப்படுவார்கள். அமைதியான ஆக்க வேலை என்றாலோ அவர்களுக்கு வெறுப்பு. அந்தத் தன்மை இன்றைக்கும் இருந்து வருகிறது.

  13. ஒருவர் தாம் செய்யும் தவறுகளைப் பூதக் கண்ணாடிக் கொண்டு பார்த்து, பிறர் தவறுகள் விஷயத்தில் அவ்விதம் பார்க்காமல் இருந்தால் தான், இரண்டையும் நியாயமாக அவர் மதிப்பிட முடியும் என்று நான் எப்பொழுதும் கருதி வந்திருக்கிறேன்.

  14. மனிதனின் உடலில் மாறுதலை உண்டாக்குவதற்கு மனத்திற்கு அபார சக்தி இருக்கிறது.

  15. ஜனநாயகத்தைப்  பாதுகாக்க வேண்டுமானால், மக்கள் தீவிரமான சுதந்திர உணர்ச்சியும், சுயமதிப்பும், ஒற்றுமை உணர்ச்சியும் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.நல்லவர்களாகவும், உண்மையானவர்களாகவும் இருப்பவர்களையே தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர்களை வற்புறுத்த வேண்டும்.

  16. ஆயுத பலத்தைக் கொண்டு உலத்தையே வெற்றி கொண்டுவிடுவதைவிட, உள்ளுக்குள் இருக்கும் காமக், குரோத உணர்ச்சிகளை வென்று விடுவது அதிகக் கஷ்டமாக எனக்குத் தோன்றுகிறது.

  17. தன்னுடன் உயிர் வாழ்வன எல்லாவற்றிற்கும் தன்னைக் கடையனாகத் தானே விரும்பி ஒரு மனிதன் வைத்துக்கொண்டு விடாத வரையில் அவனுக்கு விமோசனமே கிடையாது.

  18. அடக்கத்தின் மிகத் தொலைவான எல்லையே அகிம்சையாகும்.

Tuesday, August 28, 2012

மகாத்மா காந்தியின் சுய சரிதை - "சத்திய சோதனை" நான்காம் பாகத்திலிருந்து


  1. கடமையை முன்னிட்டுச் செய்த பணிக்கு நாம் வெகுமதியை எதிர் பார்க்கக் கூடாது. என்றாலும், எந்த நல்ல காரியமும் முடிவில் பலனளிதே தீரும் என்பது என் திடமான நம்பிக்கை.

  2. என்னிடம் இருப்பவைகளையெல்லாம் நான் துறந்து விட்டாலன்றிக் கடவுள் நெறியை நான் பின்பற்ற முடியாது' என்பதே அந்தப் பதில்.

  3. மோட்சத்தை அடைய விரும்புகிறவர்கள் தம்மிடம் இருக்கும் உடைமைகள் விஷயத்தில் தருமகர்த்தா போன்று நடந்து கொள்ள வேண்டும். தருமகர்த்தாவின் ஆதிக்கத்தில் எவ்வளவுதான்  சொத்துகளிருந்தாலும் அதில் ஒரு சிறிதும் தனக்குச் சொந்தமானதல்ல என்று அவர் எண்ணுவதுபோல எண்ண வேண்டும்.

  4. இயற்கையான குணத்தை மாற்றிவிட யாரால்தான் முடியும்? பிரபோடேயே வந்துவிட்ட எண்ணங்களை யார்தான் மாற்றிக் கொண்டு விட முடியும்? தாம் வளர்ச்சி பெற்ற வகையிலேயே தா புதல்வர்களும், தமது பராமரிப்பில் இருப்போரும் வளர்ச்சியடைவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் ஆசை.

  5. ஒரு கொள்கையைச் சரியானபடி பரப்ப வேண்டுமானால், அதற்கு எனக்குத் தெரிந்தது ஒரே ஒரு வழிதான். அந்தக் கொள்கையை நானே கடைபிடித்துக் காட்டுவதும், அறிவை வளர்த்துக்கொள்ள ஆராய்ச்சி செய்பவர்களுடன் விவாதிப்பதுமே அந்த வழி.

  6. சிறு நோய் வந்து விட்டாலும் டாக்டர், வைத்தியர்,  அல்லது ஹக்கிமிடம் ஓடி, எல்லா வகையான தாவர ,  உலோக வகை மருந்துகளையெல்லாம் விழுங்கிக் கொண்டிருப்பவர்கள், தங்கள் ஆயுளைக் குறைத்துக் கொள்ளுவது மாத்திரமல்ல, உடலுக்கு எஜமானர்களாக இருப்பதற்குப் பதிலாக அதற்கு அடிமைகளும் ஆகி விடுகின்றனர். புலனடக்கத்தை இழந்து மனிதர்களாக இல்லாதும் போகிறார்கள்.

  7. "ஒருவன் எதைச் சாப்பிடுகிறானோ அது போலவே ஆகிறான்" என்ற இந்திய பழமொழியில் அதிக உண்மை இருக்கிறது என்பதை நானும் என் சக ஊழியர்களும் அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.

  8. இது வரையில் என்னுடைய அனுபவம் ஒரு விஷயத்தைக் காட்டிவிட்டது. ஜீரண சக்தி பலமாக இல்லாதவர்களும், படுத்த படுக்கையாக இருக்கிறவர்களுக்கும், பாலுக்கு இணையான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய போஷாக்குள்ள ஆகாரம் வேறு எதுவுமே இல்லை என்பதுதான் அது.

  9. மனிதனும் அவனுடைய செயல்களும் வெவ்வேறானவை. நர்செயலைப் பாராட்டவேண்டும்; தீய செயலைக் கண்டிக்க வேண்டும். செயலை செய்யும் மனிதர், நல்லவராயிருப்பினும் தீயவராயிருந்தாலும் செயலின் தன்மைக்கு ஏற்றவாறு மரியாதைக்கும் பரிதாபத்திற்கும் உரியவராகிறார். 'பாவத்தை வெறுப்பாயாக ஆனால், பாவம் செய்பவரை வெறுக்காதே' என்பது உபதேசம். இது, புரிந்துகொள்ள எளிதானதாகவே இருந்தாலும், நடைமுறையில் இதை அனுசரிப்பதுதான் மிக அரிதாக இருக்கிறது.இதனாலேயே பகைமை என்ற நஞ்சு உலகத்தில் பரவுகிறது.

  10. ஒரு முறையை எதிர்ப்பதும், அதைத் தாக்குவதும் முற்றும் சரியானதே. ஆனால், அம்முறையை உண்டாக்கிய கர்த்தாவையே எதிர்த்துத் தாக்குவது என்பது தன்னையே எதிர்துக்கொள்ளுவதற்கு ஒப்பாகும்.ஏனெனில் நாம் எல்லோரும் ஒரே மண்ணைக்கொண்டு செய்த பாண்டங்கள்; ஒரே கடவுளின் புத்திரர்கள்.ஆகவே, நம்முள் இருக்கும் தெய்வீக சக்தியும் மகத்தானது. தனி ஒரு மனிதரை அலட்சியம் செய்வது அந்தத் தெய்விக சக்திகளை அலட்சியம் செய்வதாகும். அப்போது அம் மனிதருக்கு மட்டுமின்றி உலகம் முழுவதற்குமே தீங்கு செய்வதாக ஆகும்.

  11. ஒரு காரியத்தைச் செய்ய ஒரு முறை தொடங்கிவிட்டால், அது ஒழுக்கத் தவறானது என்று நிரூபிக்கப்பட்டாலன்றி அதைக் கைவிடவே கூடாது.

  12. தங்களுள் காணும் கடவுளை மற்றவர்களிடமும் காண வேண்டும் என்பதை நம்புகிறவர்கள், எல்லோருடனும் விருப்பு வெறுப்பின்றி வாழ முடிந்தவர்களாகவும் இருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன்.

  13. பத்திரிக்கை, ஒரு பெரிய சக்தி. ஆனால், கரையில்லாத நீர்ப் பிரவாகம், எவ்விதம் கிராமப் புறங்களையெல்லாம் மூழ்கடித்துப் பயிர்களையும் நாசமாக்கி விடுமோ அதே போலக் கட்டுதிட்டதிற்கு உட்படாத பேனாவும் நாச வேலைக்குத்தான் பயன்படும். கட்டுத்திட்டம் வெளியிலிருந்தே வருவதாயிருந்தால், கட்டுத்திட்டமில்லாததைவிட அது அதிக விஷமானதாகும். கட்டுதிட்டம் உள்ளுக்குள்ளிருந்தே வருவதாக இருந்தால்தான் அதனால் லாபம் உண்டு. இந்த நியாயமே சரியானது என்றால், உலகில் இப்பொழுது இருக்கும் பத்திரிகைகளில் எத்தனை இந்தச் சோதனையில் தேறும்? ஆனால் பயனில்லாதவைகளாக இருப்பவைகளை யார் நிறுத்துவார்கள்? மேலும் இதில் முடிவு கூறுவது யார்? பொதுவாக நல்லதையும் தீயதையும் போலப் பயனுள்ளவையும் பயனில்லாதவையும் கலந்து இருந்துகொண்டுதான் வரும். மனிதனே அதில் சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

  14. நமக்கு மிகப் பெரிய சேவை செய்து வரும் வகுப்பினர் உண்டு. ஆனால், ஹிந்துக்களாகிய நாம், அவர்களைத் 'தீண்டாதார்' என்று சொல்லுகிறோம்.

  15. ஒருவருடைய உள்ளம் மாத்திரம் பரிசுத்தமானதாக இருக்குமாயின், துன்பம் வந்ததுமே அதைச் சமாளிக்க உடனே ஆட்களும் கிடைப்பார்கள்; சாதனங்களும் கிட்டும் என்பது அனுபவத்தின் அடிப்படையில் எனக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கை.

  16. தான் பரிசீலனை செய்து நிச்சயமாகத் தெரிந்து கொள்ளாத விஷயத்தைக் கூறி மற்றொருவரை நம்பும்படி செய்துவிடுவது சத்தியத்திற்கு ஊறு செய்வதேயாகும்.

  17. எல்லோருடைய நலனில்தான் தனிப்பட்டவரின் நலனும் அடங்கியிருக்கிறது.

  18. தங்கள் உழைப்பினால் ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்ளுவதற்கு எல்லோருக்குமே ஒரே மாதிரியான உரிமை இருப்பதால், ஷவரத் தொழிலாளியின் வேலைக்கு இருக்கும் அதே மதிப்புதான் வக்கீலின் வேலைக்கும் உண்டு.

  19. ஒரு பாட்டாளியின் வாழ்க்கையும், அதாவது நிலத்தில் உழுது பாடுபடும் குடியானவரின் வாழ்க்கையும், கைத்தொழில் செய்பவரின் வாழ்க்கையுமே வாழ்வதற்கு உகந்த மேன்மையான வாழ்க்கைகள்.

  20. முடிவான லட்சியம், சத்தியத்தை நாடுவதாக மாத்திரம் இருந்துவிடுமானால், மனிதன் போடும் திட்டம் எவ்வளவு தான் தவறிப் போனாலும், முடிவு தீமையானதாக ஆவதில்லை என்பதுடன், சில சமயங்களில் எதிர்பார்த்ததைவிட அதை நன்மையானதாகவும் முடிந்துவிடுகிறது.

  21. உள்ளத்தின் தூயமையிலேயே உண்மையான அழகு இருக்கிறது.

  22. தனது முழு ஆன்ம சக்தியுடன் மனித வர்க்கத்திற்குச் சேவை செய்யவேண்டும் என்று விரும்புகிறவர், பிரம்மச்சரியம் இல்லாமல் அதைச் செய்ய முடியாது என்பதை நான் தெளிவாகக் கண்டேன்.

  23. பிரம்மச்சரியம் இல்லாத வாழ்க்கை, சாரமற்றதாகவும் மிருகத் தனமாகவும் எனக்குத் தோன்றுகிறது. மிருகத்திற்கு இயற்கையிலேயே புலனடக்கம் என்பது இன்னதென்பது தெரியாது. இதற்குரிய சக்தி இருப்பதனால் புலனடக்கத்தை அனுசரிக்கும் வரையிலும், மனிதன் மனிதனாக இருக்கிறான்.

  24. பூரணமான பிரம்மச்சரியம், அசுத்தமான எண்ணத்திற்கே இடம் தராது. உண்மையான பிரம்மச்சாரி, சரீர இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக் கனவிலும் எண்ணமாட்டான். அந்த நிலையை அவன் எய்தி விட்டால்அன்றிப் பிரம்மச்சரியத்தை அடைவதற்கு அவன் வெகு தூரம் கடக்கவேண்டி இருக்கும்.

  25. விரும்பத்தகாத எண்ணங்களைத் தடுத்து மனக் கதவைப் பூட்டி விடுவதற்கு ஒருசாவி இருக்கிறது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அதை அவரவரே தேடிக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

  26. நாவின் சுவையில் அவாவுடையவனிடமே பெரும்பாலும் காமக் குரோதங்கள் இயல்பாகக் குடிகொள்ளும்.

  27. பட்டினியைப் புலன் அடக்கத்துக்கு மட்டுமின்றிப் புலன் நுகர்ச்சிக்கும் சக்தி வாய்ந்த சாதனமாகப் பயன்படுத்தலாம்.

  28. உணவின் சுவையில் கவனம் செலுத்துவது தவறு என்பதை அனுபவம் எனக்குப் போதித்தது. நாவின் சுவையைத் திருப்தி செய்வதற்காகச் சாப்பிடக் கூடாது; உடலை வைத்திருப்பதற்கு மாத்திரமே சாப்பிட வேண்டும். உணர்ச்சி தரும் ஒவ்வோர் உறுப்பும் உடலுக்கும், உடலின் மூலம் ஆன்மாவுக்கும் ஊழியம் செய்யும்போது அதனதன் இன்ப நுகர்ச்சி மறைந்து போகிறது. அப்பொழுதுதான் தான் அதற்கென்று இயற்கை வைத்திருக்கும் கடமையை அது செய்ய ஆரம்பிக்கிறது.

  29. அழியும் உடலை அலங்கரிப்பதற்காகவும், மிகச் சொற்ப அது நீடித்திருப்பதற்கு முயலுவதற்கும், ஏராளமான மற்ற உயிர்களைப் பலியிட நாம் வெட்கப்படுவதில்லை. இதன் பலனாக நம்மையே உடலோடும், ஆன்மாவோடும் மாய்த்துக் கொள்ளுகிறோம். பழைய நோய் ஒன்றைப் போக்கிக் கொள்ள முயன்று, நூற்றுக்கணக்கான புதிய நோய்களுக்கு இடந்தருகிறோம். புலன் இன்பங்களை அனுபவிக்க முயன்று முடிவில் இன்பானுபவதிற்கான நமது சக்தியையும் இழந்துவிடுகிறோம்.

  30. புலனடக்கத்துடன் இருப்பவருக்கும், புலன் நுகர்ச்சிகளில் ஈடுபட்டிருப்பவருக்கும் எவ்விதம் வாழ்க்கை வழிகளில் வேறுபாடு இருக்குமோ அதே போல, அவ்விரு தரத்தினரின் உணவிலும் வேறுபாடு இருக்க வேண்டும். பிரம்மச்சரியத்தை அடைய விரும்புகிறவர்கள், சுகபோக வாழ்விற்கு ஏற்ற அனுஷ்டானங்களைக் கைகொண்டே தங்கள் லட்சியத்தில் தோல்வியை அடைந்துவிடுகிறார்கள்.

  31. சிற்றின்ப வயப்பட்டுள்ள மனம், உணர்ச்சிகளை அடக்குவதற்குப் பதிலாக அவற்றிற்கு அடிமையாகிவிடுகிறது. ஆகையால் உணர்ச்சியைத் தூண்டிவிடாத சுத்தமான உணவும், அவ்வப்போது பட்டினி இருந்து வருவதும் உடலுக்கு அவசியம்.

  32. பாடப் புத்தகங்களின் அவசியத்தைக் குறித்துப் பிரமாத மாகக் கூறப்படுகிறது. ஆனால், அவை அவசியம் என்று எனக்குத் தோன்றவே இல்லை. மாணவருக்கு உண்மையான பாடப் புத்தகம் உபாத்தியாயரே என்பதை நான் எப்பொழுதும் உணர்ந்து வந்தேன்.

  33. ஆன்மாவை வளர்ப்பது என்பது ஒழுக்கத்தை வளர்த்து, கடவுளைப் பற்றிய ஞானத்தை அடைவதற்கு ஒருவரை பாடுபடுபடி செய்வதோடு தன்னைத் தானே அறியச் செய்வதுமாகும்.

  34. தமது பாதுகாப்பில் இருப்பவர்கள் அல்லது தம்மிடம் மாணவர்களாக இருப்பவர்கள் செய்துவிடும் தவறுக்குப் பாதுகாப்பாளர் அல்லது உபாத்தியாயர், ஓரளவுக்காவது பொறுப்பாளியாவார் என்பதை உணர்ந்தேன்.

  35. சத்தியத்தை நாடிச் செல்லும் போது கோபம், சுயநலம், துவேஷம் முதலியன இயற்கையாகவே நீங்கிவிடுகின்றன. ஏனெனில், அவை நீங்காவிட்டால் சத்தியத்தை அடைவது இயலாததாகும். ஒருவர் மிகவும் நல்லவராக இருக்கலாம்; உண்மையை பேசுகிறவராகவும் இருக்கக் கூடும். ஆனால், காமக் குரோத உணர்ச்சிகளுக்கு மாத்திரம் வயப்பட்டவராக அவர் இருந்தாராயின் சத்தியத்தை அவர் காணவே முடியாது. அன்பு-பகை, இன்பம்-துன்பம் ஆகிய இந்த இரண்டு வகையானவைகளிலிருந்தும் முற்றும் விடுபடுவது ஒன்றே சத்தியத்தை வெற்றிகரமான வகையில் தேடுவதாகும்.

  36. சத்தியத்தின் பக்தர், சம்பிரதாயம் என்பதற்காக எதையும் செய்து விட முடியாது. தாம் திருத்தப்படுவதற்கு அவர் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். தாம் செய்ததது தவறானது என்பதைக் கண்டுகொள்ளும் போது, என்ன நேருவதாயினும் பொருட்படுத்தாது, அதை ஒப்புக்கொண்டு அதற்குப் பரிகாரம் தேட வேண்டும்.

  37. வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழில் என்று சொல்லப்பட்டதை நான் மாணவனாக இருந்தபோது கேட்டிருக்கிறேன். பொய்சொல்லிப் பணத்தையோ, அந்தஸ்தையோ சம்பாதித்துக் கொண்டுவிடவேண்டும் என்ற நோக்கம் இல்லாததனால், அதெல்லாம் என் மனத்தை மாற்றி விடவே இல்லை.

  38. அவமானம் குற்றம் செய்வதில்தான் இருக்கிறதேயன்றி, அக்குற்றத்திற்காகச் சிறை செல்லுவதில் அல்ல. அவமானத்திற்கான காரியமோ முன்பே செய்யப்பட்டு விட்டது.

Saturday, July 28, 2012

On religion

A religion is to follow not for worship.

Saturday, July 21, 2012

மகாத்மா காந்தியின் சுய சரிதை - "சத்திய சோதனை" மூன்றாம் பாகத்திலிருந்து


  1. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட ஒருவர், இவ்வாறுதான் நடந்து கொள்ளுவார் என்று நிச்சயமாகச் சொல்லுவது கஷ்டம். அதோடு,  ஒருவருடைய வெளிப்படையான  காரியங்களிலிருந்து, அவருடைய குணத்தைச் சந்தேகத்திற்கு இடமின்றிக் கண்டு அறிந்துவிட முடியாது என்பதையும் நாம் காணலாம். ஏனெனில், அவருடைய குணத்தைக் கண்டு அறிந்துவிட, அவருடைய  வெளிப்படையான காரியங்கள் மாத்திரம் போதுமான ஆதாரங்கள் ஆகிவிடா.

  2. இயற்கையைப் போல, அன்றைக்குத் தேவையானதைப்பெற்று வாழ்வதே பொது ஸ்தாபனங்களுக்கு உகந்தது என்பதில், எனக்கு எந்த விதமான சந்தேகமும் சந்தேகமும் இல்லை.

  3. ஒழுங்கான ஒரு குடும்பத்தில், குழந்தைகள் இயற்கையாகவே அடையும் கல்விப் பயிற்சியை, மாணவர்களின் விடுதிகளில் அவர்கள் அடைய முடியாது.

  4. குழந்தைகளைச் சரியானபடி வளர்க்க வேண்டுமானால், சிசுக்களைப் பேணும் முறை, பெற்றோருக்குத்  தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன்.

  5. ஒரு குழந்தை அதன் முதல் ஐந்து வயதிற்குள் கற்றுகொள்ளததைப் பின்னால் எந்தக் காலத்திலும் கற்றுக்கொள்ளுவதே இல்லை. கருவில் இருக்கும் போதே ஒரு குழந்தையின் படிப்பு ஆரம்பம் ஆகிவிடுகிறது. கருத்தரிக்கும் போது, பெற்றோருக்கு இருக்கும் உடல், மன நிலைகளே குழந்தைக்கும் ஏற்பட்டு விடுகின்றன. கர்ப்பத்தில் இருக்கும் போது தாயின் மனநிலைகள், ஆசாபாசங்கள், தன்மைகள் ஆகியவைகளால் குழந்தை பாதிக்கப்படுகிறது. பின்னர், குழந்தை பிறந்ததும், பெற்றோர்களைப் போலவே எதையும் செய்ய அது கற்றுக்கொள்கிறது. அப்புறம், அதிக காலம் வரையில் குழந்தையின் வளர்ச்சி,பெற்றோரைப் பொறுத்ததாகவே இருக்கிறது.

  6. உண்பதையும் உறங்குவதையும் போல் ஆண்-பெண் சேர்க்கையும் அவசியமான செயல்களில் ஒன்று என நம்புவது அறியாமையின் சிகரமே ஆகும் என்று நான் கருதுகிறேன்.

  7. இந்த உலகத்தின் ஒழுங்கான வளர்ச்சிக்கு ஏற்ற வகையிலே சந்ததி விருத்திச் செயல் இருக்க வேண்டும். இதை உணருகிறவர்கள், எப்பாடுபட்டும் தங்கள் காம உணர்ச்சியைக் கட்டுபடுத்திக் கொள்ளுவார்கள்.

  8. முயற்சிக்குத் தூண்டுதலாக இருந்த நோக்கம், உயர்வானதாக இல்லாது போனதனாலேயே நான் தவறினேன்.

  9. வெறும் முயற்சியைக் கொண்டே நான் திருப்தி அடைந்து விடுவது, திட்டமான செயலின் அவசியத்தை நான் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

  10. பிரம்மச்சர்யதைப் பூரணமாக அனுசரிப்பதே பிரம்மத்தை அடைவதற்கு மார்க்கம். பிரம்மச்சர்யம் என்பது மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலும் புலன்களை அடக்குவதேயாகும். 

  11. உடல், மனம், ஆன்மா ஆகியவைகளைக் காப்பதிலேயே பிரம்மச்சர்யம் இருக்கிறது .

  12. பிரம்மச்சர்ய விரதத்தை அனுசரிப்பதில் அவசியமான முதல் காரியம், ருசி உணர்ச்சியை அடக்குவதாகும். ருசியை முற்றும் அடக்கிவிடுவது, பிரம்மச்சர்ய விரதத்தை அனுசரிப்பதை எளிதாக்கி விடுகிறது என்று கண்டேன்.

  13. சோதனை ஏற்படும் சமயங்களில், மனித சுபாவம் உயர்ந்த விதத்தில் தென்படுகிறது.

  14. சமூகத்தில் இருக்கும் குறைபாடுகளை மறைப்பதையோ, அக்குறைகளுக்கு உடந்தையாக இருப்பதையோ நான் எப்பொழுதுமே வெறுத்து வந்திருக்கிறேன். சமூகத்தின் குற்றங் குறைகளைப் போக்கிக் கொள்ளாமல் அதன் உரிமைகளைப் பெற மாத்திரம் போராடுவதும் எனக்குப் பிடிக்காது.

  15. உரிமையைக் கோருவதில் சமூகத்தின் உதவியைப் பெறுவது எளிது. ஆனால், சமூகம் தன்னுடைய கடமையை நிறைவேற்றச் செய்ய வேண்டும் என்பதில் அதே சமூகத்தின் உதவியை நான் அவ்வளவு எளிதாகப் பெற்றுவிட முடியாது என்பதை கண்டேன்.

  16. சத்தியம் என்பது ஒரு பெரிய மரத்தைப் போன்றது. அதை நீர் ஊற்றி நாம் வளர்க்க வளர்க்க அது மேலும் மேலும் கனிகளை அதிகமாகக் கொடுத்துகொண்டே இருக்கிறது. சத்தியத்தின் சுரங்கத்தில் மேலும் ஆழத்தில் போய், நாம் தேடத் தேட அதில் பொதிந்து கிடக்கும், மேலும் மேலும் அதிக விலை மதிப்புள்ள ரத்தினங்களைக் காண்கிறோம். பல வகைகளிலும் சேவை செய்வதற்கு ஏற்படும் வாய்ப்புகளே அந்த ரத்தினங்களாகும்.

  17. பொதுஜன சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள், விலை உயர்ந்த வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளவே கூடாது என்பது என்னுடைய திடமான அபிப்பிராயம்.

  18. தொண்டு என்பது கண்டபடியெல்லாம் உடனே முளைத்து விடக் கூடியதன்று. இதற்கு, முதலில் மனத்தில் விருப்பம் வேண்டும். பிறகு அனுபவமும் தேவை.

  19. செல்வம், அதிகாரம், அந்தஸ்து ஆகியவைகளுக்காக மனிதன் எவ்வளவு பெரிய பாவங்களையும், அநீதிகளையும் செய்ய வேண்டியவனாகிறான்!

  20. ஒருவருக்கு என்னதான் அதிகமான வேலை இருந்தாலும் சரி, அவர் சாப்பிடுவதற்கு எப்படி நேரம் வைத்துக் கொள்ளுகிறாரோ அதே போலத் தேகாப்பியாசம் செய்வதற்கும் அவகாசம் தேடிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்வது, ஒருவனுடைய வேலை செய்யும் சக்தியைக் குறைத்து விடுவதற்கு பதிலாக அதிகபடுத்தவே செய்கிறது என்பது எனது பணிவான அபிப்பிராயம்.

  21. ஒரு பிராணி எவ்வளக்கெவ்வளவு ஆதரவற்றதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அது, மனிதனின் கொடுமையிலிருந்து காக்கப்படுவதற்கு  உரிமைப் பெற்றிருக்கிறது என்று கருதுகிறேன்.

  22. 'மகாத்மா'க்களின் துயரங்கள் 'மகாத்மா'க்களுக்கு மாத்திரமே தெரியும்.

  23. "மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்கிறான்" என்று ஆண்டவனே கூறியிருக்கிறார். கரும பலனை  அனுபவிக்காமல் யாரும் தப்பிவிடவே முடியாது. ஆகையால், இதில் ஆண்டவன் தலையிடுவதற்கு அவசியமே இல்லை. அவர் இச் சட்டத்தை இயற்றிவிட்டு விலகிக்கொண்டார் என்றே சொல்லலாம்.

  24. நாம் உயிர் வாழ்வதற்கென்று மேற்கொள்ளும் சாதனங்களுக்கும் ஓர் எல்லை இருக்கவேண்டும். உயிர் வைத்திருப்பதற்கு அவசியம் என்றாலும் சில காரியங்களை நாம் செய்யக்கூடாது.

  25. நாட்டில் ஒரு வேலையும் அகப்படாமல் கஷ்டப்படும் ஊக்கமுள்ள இளைஞர்கள், மற்ற நாடுகளில் குடியேறிவிட வேண்டும் என்று அப்பொழுது  நம்பினேன்.

Sunday, July 08, 2012

Naan EE - worth a watch

Yesterday watched the tamil movie "Naan EE". The movie is worth a watch. The movie is all about revenge by a young man who gets killed by the baddie. How the revenge takes place?

The dead young man reincarnates as a fly and takes revenge. Hearing this storyline, one might easily think it's another dumb movie into tamil cinema garbage.  But trust me, the movie just captures you from the beginning to end.

To put the critics aside and make people understand that this movie is just a fantasy story, the director starts the film as a bedtime story told by a father to his child.

The short and sweet romantic scenes between the hero and heroine, the revenge by the fly on the baddie, a small cameo by comedy actor santhanam, the acting of sudeep as the baddie are the highlights of the film.

I know lots of credit should go to the CG team for their wonderful graphics work. But sudeep steals the show completely by his extrordinary acting.

Monday, June 11, 2012

Public Understanding and Popularization of Science by Arvind Gupta

For Arvind Gupta's idea of creating simple toys and educational experiments that fascinates children - http://www.arvindguptatoys.com/toys.html

Tuesday, May 08, 2012

Monday, March 26, 2012

Life is beautiful!

Yes, see my life... :-)


Apply online for new/duplicate PAN card


I lost my PAN (Permanent Account Number) card few years back. And I was managing with the photocopy of the same till last month. Now I got my duplicate PAN card from INCOME TAX DEPT., GOVT. OF INDIA.

And the process for getting the duplicate card is very easy. I applied for the duplicate PAN online by making a credit card payment of Rs. 94.

Below is the link to apply online for new/duplicate PAN card.

https://tin.tin.nsdl.com/pan/index.html

Wednesday, March 21, 2012

மகாத்மா காந்தியின் சுய சரிதை - "சத்திய சோதனை" இரண்டாம் பாகத்திலிருந்து


  1. குருவின்றி உண்மையான ஞானம் ஏற்பட முடியாது என்ற தத்துவத்திலும் அதிக உண்மை உண்டு என்றே நினைக்கிறேன்.

  2. ஓர் அதிகாரி, ஓய்வு பெற்றிருக்கும்போது ஒரு மனிதராகவும் உத்தியோகத்தில்;அமர்ந்திருக்கும்போது வேறு மனிதராகவும் ஆகிவிடுகிறார் என்பதையும் அறிந்தேன்.

  3. இளைஞர்களில் பலர், ஆரம்பத்தில் ஒரு பாவமும் அறியாதவர்களாக இருந்தும், அவமானம் என்று தவறாக ஏற்பட்டுவிடும் உணர்ச்சியின் காரணமாகப் பாவத்திற்கு இழுக்கப்பட்டு விடுகின்றனர்.

  4. என்னுடைய பாவங்களின் விளைவுகளிலிருந்து விமோசனம் பெற்றுவிட வேண்டும் என்று நான் நாடவில்லை. பாவத்திலிருந்தே, அதாவது பாவ எண்ணத்தில் இருந்தே விமோசனம் பெறுவதைத்தான் நான் நாடுகிறேன்.

  5. பிளவுபட்டிருக்கும் கட்சிக்காரர்களை ஒன்றாக்குவதே வக்கீலின் உண்மையான வேலை என்பதை உணர்ந்து கொண்டேன்.

  6. மக்களின் வாக்குறுதியை எல்லாவற்றிலும் நம்பலாம்; ஆனால், பண விஷயத்தில் மாத்திரம் நம்பக்கூடாது. கொடுப்பதாகத் தாங்கள் ஒப்புக்கொண்ட பணத்தைச் சீக்கிரத்தில் கொடுக்கக் கூடியவர்களை நான் பார்த்ததே இல்லை.

  7. உண்மையில், அவசியமானதற்கு மேல் பணம் இருக்கக்கூடாது என்ற கொள்கையை வெகு காலத்திற்கு முன்னாலிருந்தே நான் கற்றுக்கொண்டிருந்தேன்.

  8. கணக்குகளைச் சரியாக வைத்திருக்க வேண்டியது எந்த ஸ்தாபனதிற்குமே அத்தியாவசியமானதாகும். இல்லை யானால் அந்த ஸ்தாபனத்திற்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு விடும். சரியான கணக்கு வைத்திருக்காவிட்டால், உண்மையை அதனுடைய அசல்தூய்மையுடன் வைத்து இருப்பதென்பது இயலாத காரியம்.

  9. மனப்பூர்வமாகக் கொள்ளும் புனிதமான ஆசை எதுவும் நிறைவேறி விடுகிறது. இந்த விதி உண்மையானது என்பதை என் சொந்த அனுபவத்தில் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன்.

  10. மனிதர்கள் தங்களுடைய சகோதர மனிதர்களை அவமானப் படுத்துவதன் மூலம் தாங்கள் கௌரவிக்கப்படுவதாக எப்படி நினைக்கிறார்கள் என்பது, எனக்கு என்றுமே புரியாத மர்மமாக இருந்துவருகிறது.

  11. ஒருமுறை பிளவு ஏற்பட்டு விட்டால், பிறகு என்னதான் ஒட்டுபோட்டாலும், பிளவு பிளவுதான்.

  12. மதமும் ஒழுக்கமும் ஒன்றே என்ற கருத்தில் நான் உறுதியுடன் இருந்தேன்.

  13. ஒரு விஷயத்தைத் தூரத்திலிருந்து கேள்விப்படும் போது உள்ளதையும்விடப் பெரியதாகவே அது தோன்றி விடுகிறது.

  14. செய்வதானால் சரியாகச் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் சும்மா இருந்துவிடவேண்டும்.

  15. 'விரோதிகள்' என்று சொல்லபடுகிறவர்கள், 'வஞ்சகர்'களாகவும் இருப்பார்கள் என்று நாம் எப்படி எண்ணிக்கொள்வது? விரோதிகள் என்பதனால் அவர்கள் கட்டாயம் தவறு செய்பவர்களாகவும் இருக்க வேண்டுமா?

  16. சந்தோசம் இல்லாமல் செய்யும் சேவையினால் செய்கிறவருக்கும் நன்மை இல்லை; சேவை பெறுகிறவருக்கும் நன்மை இல்லை. மகிழ்ந்து செய்யும் சேவையுடன் ஒப்பிட்டால், மற்றெல்லா இன்பங்களும் உடமைகளும் பயனற்றவை என்ற வகையில் மங்கிப்போகின்றன.

  17. எதிர்க்கட்சிக்கு நியாயத்தைச் செய்வதன் மூலம் தன் கட்சிக்கு நியாயம் சீக்கிரத்தில் கிடைக்கிறது என்பதை என் அனுபவம் காட்டியிருக்கிறது.

Monday, February 27, 2012

மகாத்மா காந்தியின் சுய சரிதை - "சத்திய சோதனை" முதல் பாகத்திலிருந்து


  1. பெரியவர்களின் கட்டளைகளை நிறைவேற்றிவிட்டு, அவர்களுடைய செய்கைகளைக் கவனிக்காமல் இருந்துவிட நான் கற்று கொண்டேன்.

  2. ஆசைகளை துறக்காமல், ஆசைகுரிய பொருள்களை துறப்பதென்பது, நீ எவ்வளவு முயன்றாலும், அற்பாயுசில் முடிந்துவிடக் கூடியதே. - நிஷ்குலாந்தர்

  3. நோக்கம் மாத்திரம் தூயதாக இருக்குமாயின் ஒருவனை இறுதியில் எப்படியும் கடவுள் காத்தருள்வார் என்பதை எத்தனையோ உதாரணங்கள் எனக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றன.

  4. சீர்திருத்த முற்படுகிறவர், யாரைச் சீர்திருத்த விரும்புகிறாரோ அவரிடம் நெருங்கிய சகவாசம் வைத்துக் கொள்ளலாகாது.

  5. ஆன்ம ஒருமைப்பாடே உண்மையான நட்பு.

  6. மனிதனிடம் நற்குணங்களை விடத் தீயகுணங்களே எளிதில் படிந்து விடுகின்றன.

  7. அன்புக்கணைகளினால் எய்யப்பட்டவன் எவனோ, அவனே அறிவான் அதன் சக்தியை.

  8. மன்னிப்பு அளிப்பதற்கு உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய பாவத்தைச் செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்காகச் சரியான வகையில் வருத்தபடுவதாகும்.

  9. சமயம் என்பதை, அதன் விரிவான கருத்தில்-தன்னைத் தானே அறிதல் அல்லது ஆன்ம ஞானம் என்ற பொருளிலேயே-நான் உபயோகிக்கிறேன்.

  10. ஒழுக்கமே எல்லாவற்றிற்கும் அடிப்படை; சத்தியமே ஒழுக்கமெல்லாவற்றின் சாரமும்.

  11. சுயநலம் ஒருவனை குருடனாக்கிவிடுகிறது. தெளிவற்ற ஒரு மனோ பாவத்தினால் அவன் தன்னை தானே ஏமாற்றிக் கொள்ளுவதுடன் உலகத்தையும், கடவுளையும் கூட ஏமாற்ற பார்க்கிறான்.

  12. சத்தியத்தை நாடுகிறவர் அனுசரிக்க வேண்டிய ஆன்மிகக் கட்டுத்திட்டங்களில் மௌனமும் ஒரு பகுதி.

  13. தனக்கு ஆன்மிக பலம் அதிகம் இருக்கிறது என்று அகம்பாவம் கொண்டிருந்து, முடிவில் அது தூசாகிப் போனதைக் காணாதவர் யார்? சமய ஞானம் வேறு; சாதனை வேறு. ஆகவே, சாதனை இல்லாத சமய ஞானம், சோதனை ஏற்படும் சமயங்களில் வெறும் உமியாகவே தோன்றுகிறது.

  14. இறைவனை வேண்டுவதும், பூசிப்பதும், பிரார்த்திப்பதும் மூட நம்பிக்கைகள் அல்ல. உண்பதும், பருகுவதும், அமர்வதும், நடப்பதும் எவ்விதம் உண்மையான செயல்களோ அவற்றைவிடவும் அதிக உண்மையான செயல்கள் அவை.

  15. உள்ளத்திலிருந்து காமக் குரோதாதிகளையெல்லாம் போக்கிப்புனிதமாக்கிக் கொள்ளுவதற்குத் தகுந்த சாதனை, பிரார்த்தனையே என்பதில் எனக்குச் சிறிதளவும் சந்தேகமே இல்லை.

  16. நாகரிகம் படைத்த நீங்கள் எல்லாம் கோழைகள். மகான்கள், ஒருவருடைய வெளித்தோற்றத்தைக் கண்டு மதிப்பதே இல்லை. அவருடைய உள்ளதைப்பற்றியே அவர்கள் நினைக்கிறார்கள். - நாராயண ஹேமசந்திரர்

  17. பொதுவான யோக்கியப் பொறுப்பும் உழைப்பும் இருந்தால், ஒருவர் தம்முடைய ஜீவனத்திற்குச் சம்பாதித்துக் கொள்ள அவையே போதும்.