- நல்லவனாய் இரு. ஆனால் அதை நிரூபிக்க முயற்சி செய்யாதே. அதை விட முட்டாள் தனமான விஷயம் எதுவும் இல்லை.
- ஆசைகளை திருப்தி செய்வதில் அல்ல. கட்டுபடுத்துவதில் தான் அமைதி உள்ளது.
- கற்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே நல்லது. ஏனெனில் அறியாமை தான் தீவினையின் மூலவேர்.
- நல்ல நட்பை தேடிக்கொள்ள பல வருடம் போதாது. நல்ல நட்பை எதிரியாக்க ஒரு நிமிடமே போதும்.
- ஒருவனின் காலடியில் வாழ்வதை விட எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்.
- ஏமாற்றுவதை காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக்குரியது.
- விரிக்காத வரை சிறகுகள் பாரம் தான். விரித்து பார்த்தால் வானம் கூட தொடு தூரம் தான்.
- கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்.
Thursday, March 21, 2013
பொன்மொழிகள்...
Sunday, March 17, 2013
எளிமை அழகு
ஒரு வார இதழில் எளிமையை பற்றி இளையராஜா...
கேள்வி: இசைப் பயணத்தின் உச்சியில் இருக்கும் நீங்கள் இந்த எளிமையான தோற்றத்திற்கு மாறக் காரணம் என்ன?
இளையராஜா: அழகு எல்லாமே எளிமையில்தான் கொட்டிக் கிடக்கிறது. அழகை விரும்புவதில் என்ன தவறு?
Subscribe to:
Posts (Atom)