Monday, March 26, 2012
Apply online for new/duplicate PAN card
I lost my PAN (Permanent Account Number) card few years back. And I was managing with the photocopy of the same till last month. Now I got my duplicate PAN card from INCOME TAX DEPT., GOVT. OF INDIA.
And the process for getting the duplicate card is very easy. I applied for the duplicate PAN online by making a credit card payment of Rs. 94.
Below is the link to apply online for new/duplicate PAN card.
https://tin.tin.nsdl.com/pan/index.html
Labels:
Govt of India.,
Income Tax Dept,
PAN
Wednesday, March 21, 2012
மகாத்மா காந்தியின் சுய சரிதை - "சத்திய சோதனை" இரண்டாம் பாகத்திலிருந்து
- குருவின்றி உண்மையான ஞானம் ஏற்பட முடியாது என்ற தத்துவத்திலும் அதிக உண்மை உண்டு என்றே நினைக்கிறேன்.
- ஓர் அதிகாரி, ஓய்வு பெற்றிருக்கும்போது ஒரு மனிதராகவும் உத்தியோகத்தில்;அமர்ந்திருக்கும்போது வேறு மனிதராகவும் ஆகிவிடுகிறார் என்பதையும் அறிந்தேன்.
- இளைஞர்களில் பலர், ஆரம்பத்தில் ஒரு பாவமும் அறியாதவர்களாக இருந்தும், அவமானம் என்று தவறாக ஏற்பட்டுவிடும் உணர்ச்சியின் காரணமாகப் பாவத்திற்கு இழுக்கப்பட்டு விடுகின்றனர்.
- என்னுடைய பாவங்களின் விளைவுகளிலிருந்து விமோசனம் பெற்றுவிட வேண்டும் என்று நான் நாடவில்லை. பாவத்திலிருந்தே, அதாவது பாவ எண்ணத்தில் இருந்தே விமோசனம் பெறுவதைத்தான் நான் நாடுகிறேன்.
- பிளவுபட்டிருக்கும் கட்சிக்காரர்களை ஒன்றாக்குவதே வக்கீலின் உண்மையான வேலை என்பதை உணர்ந்து கொண்டேன்.
- மக்களின் வாக்குறுதியை எல்லாவற்றிலும் நம்பலாம்; ஆனால், பண விஷயத்தில் மாத்திரம் நம்பக்கூடாது. கொடுப்பதாகத் தாங்கள் ஒப்புக்கொண்ட பணத்தைச் சீக்கிரத்தில் கொடுக்கக் கூடியவர்களை நான் பார்த்ததே இல்லை.
- உண்மையில், அவசியமானதற்கு மேல் பணம் இருக்கக்கூடாது என்ற கொள்கையை வெகு காலத்திற்கு முன்னாலிருந்தே நான் கற்றுக்கொண்டிருந்தேன்.
- கணக்குகளைச் சரியாக வைத்திருக்க வேண்டியது எந்த ஸ்தாபனதிற்குமே அத்தியாவசியமானதாகும். இல்லை யானால் அந்த ஸ்தாபனத்திற்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு விடும். சரியான கணக்கு வைத்திருக்காவிட்டால், உண்மையை அதனுடைய அசல்தூய்மையுடன் வைத்து இருப்பதென்பது இயலாத காரியம்.
- மனப்பூர்வமாகக் கொள்ளும் புனிதமான ஆசை எதுவும் நிறைவேறி விடுகிறது. இந்த விதி உண்மையானது என்பதை என் சொந்த அனுபவத்தில் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன்.
- மனிதர்கள் தங்களுடைய சகோதர மனிதர்களை அவமானப் படுத்துவதன் மூலம் தாங்கள் கௌரவிக்கப்படுவதாக எப்படி நினைக்கிறார்கள் என்பது, எனக்கு என்றுமே புரியாத மர்மமாக இருந்துவருகிறது.
- ஒருமுறை பிளவு ஏற்பட்டு விட்டால், பிறகு என்னதான் ஒட்டுபோட்டாலும், பிளவு பிளவுதான்.
- மதமும் ஒழுக்கமும் ஒன்றே என்ற கருத்தில் நான் உறுதியுடன் இருந்தேன்.
- ஒரு விஷயத்தைத் தூரத்திலிருந்து கேள்விப்படும் போது உள்ளதையும்விடப் பெரியதாகவே அது தோன்றி விடுகிறது.
- செய்வதானால் சரியாகச் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் சும்மா இருந்துவிடவேண்டும்.
- 'விரோதிகள்' என்று சொல்லபடுகிறவர்கள், 'வஞ்சகர்'களாகவும் இருப்பார்கள் என்று நாம் எப்படி எண்ணிக்கொள்வது? விரோதிகள் என்பதனால் அவர்கள் கட்டாயம் தவறு செய்பவர்களாகவும் இருக்க வேண்டுமா?
- சந்தோசம் இல்லாமல் செய்யும் சேவையினால் செய்கிறவருக்கும் நன்மை இல்லை; சேவை பெறுகிறவருக்கும் நன்மை இல்லை. மகிழ்ந்து செய்யும் சேவையுடன் ஒப்பிட்டால், மற்றெல்லா இன்பங்களும் உடமைகளும் பயனற்றவை என்ற வகையில் மங்கிப்போகின்றன.
- எதிர்க்கட்சிக்கு நியாயத்தைச் செய்வதன் மூலம் தன் கட்சிக்கு நியாயம் சீக்கிரத்தில் கிடைக்கிறது என்பதை என் அனுபவம் காட்டியிருக்கிறது.
Labels:
Gandhi,
Mahatma,
My Experiments with Truth
Subscribe to:
Posts (Atom)