- பெரியவர்களின் கட்டளைகளை நிறைவேற்றிவிட்டு, அவர்களுடைய செய்கைகளைக் கவனிக்காமல் இருந்துவிட நான் கற்று கொண்டேன்.
- ஆசைகளை துறக்காமல், ஆசைகுரிய பொருள்களை துறப்பதென்பது, நீ எவ்வளவு முயன்றாலும், அற்பாயுசில் முடிந்துவிடக் கூடியதே. - நிஷ்குலாந்தர்
- நோக்கம் மாத்திரம் தூயதாக இருக்குமாயின் ஒருவனை இறுதியில் எப்படியும் கடவுள் காத்தருள்வார் என்பதை எத்தனையோ உதாரணங்கள் எனக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றன.
- சீர்திருத்த முற்படுகிறவர், யாரைச் சீர்திருத்த விரும்புகிறாரோ அவரிடம் நெருங்கிய சகவாசம் வைத்துக் கொள்ளலாகாது.
- ஆன்ம ஒருமைப்பாடே உண்மையான நட்பு.
- மனிதனிடம் நற்குணங்களை விடத் தீயகுணங்களே எளிதில் படிந்து விடுகின்றன.
- அன்புக்கணைகளினால் எய்யப்பட்டவன் எவனோ, அவனே அறிவான் அதன் சக்தியை.
- மன்னிப்பு அளிப்பதற்கு உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய பாவத்தைச் செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்காகச் சரியான வகையில் வருத்தபடுவதாகும்.
- சமயம் என்பதை, அதன் விரிவான கருத்தில்-தன்னைத் தானே அறிதல் அல்லது ஆன்ம ஞானம் என்ற பொருளிலேயே-நான் உபயோகிக்கிறேன்.
- ஒழுக்கமே எல்லாவற்றிற்கும் அடிப்படை; சத்தியமே ஒழுக்கமெல்லாவற்றின் சாரமும்.
- சுயநலம் ஒருவனை குருடனாக்கிவிடுகிறது. தெளிவற்ற ஒரு மனோ பாவத்தினால் அவன் தன்னை தானே ஏமாற்றிக் கொள்ளுவதுடன் உலகத்தையும், கடவுளையும் கூட ஏமாற்ற பார்க்கிறான்.
- சத்தியத்தை நாடுகிறவர் அனுசரிக்க வேண்டிய ஆன்மிகக் கட்டுத்திட்டங்களில் மௌனமும் ஒரு பகுதி.
- தனக்கு ஆன்மிக பலம் அதிகம் இருக்கிறது என்று அகம்பாவம் கொண்டிருந்து, முடிவில் அது தூசாகிப் போனதைக் காணாதவர் யார்? சமய ஞானம் வேறு; சாதனை வேறு. ஆகவே, சாதனை இல்லாத சமய ஞானம், சோதனை ஏற்படும் சமயங்களில் வெறும் உமியாகவே தோன்றுகிறது.
- இறைவனை வேண்டுவதும், பூசிப்பதும், பிரார்த்திப்பதும் மூட நம்பிக்கைகள் அல்ல. உண்பதும், பருகுவதும், அமர்வதும், நடப்பதும் எவ்விதம் உண்மையான செயல்களோ அவற்றைவிடவும் அதிக உண்மையான செயல்கள் அவை.
- உள்ளத்திலிருந்து காமக் குரோதாதிகளையெல்லாம் போக்கிப்புனிதமாக்கிக் கொள்ளுவதற்குத் தகுந்த சாதனை, பிரார்த்தனையே என்பதில் எனக்குச் சிறிதளவும் சந்தேகமே இல்லை.
- நாகரிகம் படைத்த நீங்கள் எல்லாம் கோழைகள். மகான்கள், ஒருவருடைய வெளித்தோற்றத்தைக் கண்டு மதிப்பதே இல்லை. அவருடைய உள்ளதைப்பற்றியே அவர்கள் நினைக்கிறார்கள். - நாராயண ஹேமசந்திரர்
- பொதுவான யோக்கியப் பொறுப்பும் உழைப்பும் இருந்தால், ஒருவர் தம்முடைய ஜீவனத்திற்குச் சம்பாதித்துக் கொள்ள அவையே போதும்.
Monday, February 27, 2012
மகாத்மா காந்தியின் சுய சரிதை - "சத்திய சோதனை" முதல் பாகத்திலிருந்து
Labels:
Gandhi,
Mahatma,
My Experiments with Truth
Subscribe to:
Posts (Atom)