Monday, March 26, 2012

Life is beautiful!

Yes, see my life... :-)


Apply online for new/duplicate PAN card


I lost my PAN (Permanent Account Number) card few years back. And I was managing with the photocopy of the same till last month. Now I got my duplicate PAN card from INCOME TAX DEPT., GOVT. OF INDIA.

And the process for getting the duplicate card is very easy. I applied for the duplicate PAN online by making a credit card payment of Rs. 94.

Below is the link to apply online for new/duplicate PAN card.

https://tin.tin.nsdl.com/pan/index.html

Wednesday, March 21, 2012

மகாத்மா காந்தியின் சுய சரிதை - "சத்திய சோதனை" இரண்டாம் பாகத்திலிருந்து


  1. குருவின்றி உண்மையான ஞானம் ஏற்பட முடியாது என்ற தத்துவத்திலும் அதிக உண்மை உண்டு என்றே நினைக்கிறேன்.

  2. ஓர் அதிகாரி, ஓய்வு பெற்றிருக்கும்போது ஒரு மனிதராகவும் உத்தியோகத்தில்;அமர்ந்திருக்கும்போது வேறு மனிதராகவும் ஆகிவிடுகிறார் என்பதையும் அறிந்தேன்.

  3. இளைஞர்களில் பலர், ஆரம்பத்தில் ஒரு பாவமும் அறியாதவர்களாக இருந்தும், அவமானம் என்று தவறாக ஏற்பட்டுவிடும் உணர்ச்சியின் காரணமாகப் பாவத்திற்கு இழுக்கப்பட்டு விடுகின்றனர்.

  4. என்னுடைய பாவங்களின் விளைவுகளிலிருந்து விமோசனம் பெற்றுவிட வேண்டும் என்று நான் நாடவில்லை. பாவத்திலிருந்தே, அதாவது பாவ எண்ணத்தில் இருந்தே விமோசனம் பெறுவதைத்தான் நான் நாடுகிறேன்.

  5. பிளவுபட்டிருக்கும் கட்சிக்காரர்களை ஒன்றாக்குவதே வக்கீலின் உண்மையான வேலை என்பதை உணர்ந்து கொண்டேன்.

  6. மக்களின் வாக்குறுதியை எல்லாவற்றிலும் நம்பலாம்; ஆனால், பண விஷயத்தில் மாத்திரம் நம்பக்கூடாது. கொடுப்பதாகத் தாங்கள் ஒப்புக்கொண்ட பணத்தைச் சீக்கிரத்தில் கொடுக்கக் கூடியவர்களை நான் பார்த்ததே இல்லை.

  7. உண்மையில், அவசியமானதற்கு மேல் பணம் இருக்கக்கூடாது என்ற கொள்கையை வெகு காலத்திற்கு முன்னாலிருந்தே நான் கற்றுக்கொண்டிருந்தேன்.

  8. கணக்குகளைச் சரியாக வைத்திருக்க வேண்டியது எந்த ஸ்தாபனதிற்குமே அத்தியாவசியமானதாகும். இல்லை யானால் அந்த ஸ்தாபனத்திற்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு விடும். சரியான கணக்கு வைத்திருக்காவிட்டால், உண்மையை அதனுடைய அசல்தூய்மையுடன் வைத்து இருப்பதென்பது இயலாத காரியம்.

  9. மனப்பூர்வமாகக் கொள்ளும் புனிதமான ஆசை எதுவும் நிறைவேறி விடுகிறது. இந்த விதி உண்மையானது என்பதை என் சொந்த அனுபவத்தில் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன்.

  10. மனிதர்கள் தங்களுடைய சகோதர மனிதர்களை அவமானப் படுத்துவதன் மூலம் தாங்கள் கௌரவிக்கப்படுவதாக எப்படி நினைக்கிறார்கள் என்பது, எனக்கு என்றுமே புரியாத மர்மமாக இருந்துவருகிறது.

  11. ஒருமுறை பிளவு ஏற்பட்டு விட்டால், பிறகு என்னதான் ஒட்டுபோட்டாலும், பிளவு பிளவுதான்.

  12. மதமும் ஒழுக்கமும் ஒன்றே என்ற கருத்தில் நான் உறுதியுடன் இருந்தேன்.

  13. ஒரு விஷயத்தைத் தூரத்திலிருந்து கேள்விப்படும் போது உள்ளதையும்விடப் பெரியதாகவே அது தோன்றி விடுகிறது.

  14. செய்வதானால் சரியாகச் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் சும்மா இருந்துவிடவேண்டும்.

  15. 'விரோதிகள்' என்று சொல்லபடுகிறவர்கள், 'வஞ்சகர்'களாகவும் இருப்பார்கள் என்று நாம் எப்படி எண்ணிக்கொள்வது? விரோதிகள் என்பதனால் அவர்கள் கட்டாயம் தவறு செய்பவர்களாகவும் இருக்க வேண்டுமா?

  16. சந்தோசம் இல்லாமல் செய்யும் சேவையினால் செய்கிறவருக்கும் நன்மை இல்லை; சேவை பெறுகிறவருக்கும் நன்மை இல்லை. மகிழ்ந்து செய்யும் சேவையுடன் ஒப்பிட்டால், மற்றெல்லா இன்பங்களும் உடமைகளும் பயனற்றவை என்ற வகையில் மங்கிப்போகின்றன.

  17. எதிர்க்கட்சிக்கு நியாயத்தைச் செய்வதன் மூலம் தன் கட்சிக்கு நியாயம் சீக்கிரத்தில் கிடைக்கிறது என்பதை என் அனுபவம் காட்டியிருக்கிறது.